• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் கன மழை.., நீர் குளம் போல தேங்கியது…

BySeenu

Nov 23, 2023

கோவையில் பெய்த கன மழையால் ராமநாதபுரம் சிக்னல் அருகே ரோட்டில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது. அப்போது பணியில் இருந்த ராமநாதபுரம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் முருகசாமி இருவரும் சேர்ந்து ரோட்டில் தேங்கியிருந்த நீரை அகற்றுவதற்கு பெரு முயற்சி செய்தனர். பல்வேறு வகையில் நீரை அகற்றுவதற்காக சாக்கடை கால்வாயில் இறங்கி அங்கே இருந்த கழிவுகளை அகற்றி நீர் கால்வாயில் செல்வதற்கு முயற்சி செய்தனர். இதனால் ஓரளவு தேங்கி இருந்த நீர் கால்வாயில் வழிந்து ஓடியது. இது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை ஆச்சிரியபடுத்தியது. இருவரது பணியை பெருமளவில் பாராட்டினார்கள்.