நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது.
உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. மேகமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர்.மேலும் வேல்வியூ, மந்தாடா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மேகமூட்டம் காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.