மதுரை மேல வாசலை சேர்ந்த மாரியம்மாள் வயது 36 பெயர் வீர ஐயா காளவாசல் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மாரியம்மாள் பாளையம் வரும்பொழுது எதிரே திடீரென ஒரு இருசக்கர வாகனம் குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் அடிக்கும் பொழுது எதிரே வந்த ஆட்டோ மீது மோதி ஆட்டோ கவிழ்ந்தது.

அந்த ஆட்டோவில் இருந்த இரும்பு ராடு மாரியம்மாவின் கழுத்தை அறுத்து அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த திலகர் திடல் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உதவி ஆய்வாளர் காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் ஷேர் ஆட்டோ களின் தொல்லை அதிக அளவு ஏற்படுகிறது என பொதுமக்கள் அதிகளவு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். காவல்துறையும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரும் பொதுமக்களையும் கோரிக்கையாக உள்ளது. மூவர் பயணம் செய்ய வேண்டிய வாகனத்தில் பத்து முதல் 15 பேர் வரைக்கும் பயணத்தில் செய்ததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.











; ?>)
; ?>)
; ?>)