• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தி திணிப்பை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…

Byகாயத்ரி

Apr 9, 2022

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்றாக கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #stopHindiImposition என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. மேலும் “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்”நீ தேடி வந்த கோயுள்ள நாடு இதுவல்லவே!”என்ற வாசகத்தை திமுகவினரும், இந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை நம் தமிழர் ஆதரவாளர்களும் பதிவிட்டு வருகின்றனர்.