• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தேங்கிய மழைநீரால் அவதி! வாகன ஓட்டிகள் விபத்து… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

ByKalamegam Viswanathan

Oct 17, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு ஜங்சன் நான்கு வழிச்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எய்ம்ஸ் அமைய உள்ள முக்கிய பகுதியான தோப்பூர் – கூத்தியார்குண்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அனுகு சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பள்ளங்களின் ஆழத்தை கணிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பள்ளங்களில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுவதும், காயமடைவதும் சேறும் சகதியுமாக உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மீது சேறும் சகதியும் கலந்த மழைநீர் தெளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான்கு சாலை சந்திக்கும் இடம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை உள்ள இடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் கார்களில் வருவோருக்கு மழை நீர் மூடிய பள்ளம் தெரியாததால் அதை கடந்து செல்லும் போது நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

இதே போல மழை பெய்யும் நேரம் எல்லாம் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. இருப்பினும் நான்கு வழிச்சாலையை நிர்வகிக்கும் ”என்.எச்.ஏ.ஐ. நிர்வாகமும் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளன என்றும் மழைநீர் தேங்கிய சாலையை உடனடியாத சீரமைக்க வேண்டும் என்றும் தற்போது மழை பெய்யும்போது வெளியே செல்வதே அச்சமாக உள்ளது” என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மழைக்காலம் தீவிரமடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.