கடந்த ஐந்து நாட்களாக கோவையில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவ மழை, இன்று வெயிலுடன் கூடிய சாரல் மழையாக மாறி இதமான சூழலை உருவாக்கி உள்ளது.
ஏற்கனவே கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன.

கோடை காலத்தின் கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, தென்மேற்கு பருவமழை கோவை மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்து உள்ளது. கடந்த ஐந்து தினங்களாக விட்டு, விட்டு பெய்து வந்த கன மழையால், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் வெயில் அடிக்கத் தொடங்கிய போதிலும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை நகரத்திற்கு குளுமையான சூழலை அளிக்கிறது. அணைகள் நிரம்பி வழிகின்ற நிலையில், இந்த சீரான மழைநீர் விநியோகம் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, விவசாயத்திற்கும் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழையின் தொடக்கம் கோவை மக்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும், செழிப்பையும் விதைத்து உள்ளது.