அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி தலைமையில் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் முத்துராஜ்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் துர்க்கையாண்டி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ண கண்ணன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார், ராஜகுருநாதன், ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி, ஆகியோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அதிமுக வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





