• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் தீபாவளி வாழ்த்துகள்

Byமதி

Nov 2, 2021

அதிமுகவில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. கட்சியின் பொன்விழாவின் போது அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என அவரால் ஏற்படுத்தப்பட்ட சலசலப்பு இன்னும் ஓயவில்லை.

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் அவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் சசிகலா கூறப்பட்டிருப்பதாவது:-

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் தடுப்பூசியையும் தவறாமல் செலுத்திக் கொண்டு கவனமாக சந்தோசத்துடன் இந்த தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நரகாசுரன் என்னும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் சூழ்ச்சிகளும் தீமைகளும் நம்மை விட்டு விலக நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம்.

இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அமைதியும் அன்பும் தழைக்கட்டும், வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.