• Tue. Oct 8th, 2024

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

ByA.Tamilselvan

Jul 14, 2022

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *