• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் ஐடியை முடக்கிய ஹேக்கர்கள்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர்கள், அதன் முகப்புப் படமாக கார்ட்டூன் ஒன்றை மாற்றியுள்ளனர். கிரிப்டோகரன்சி தொடர்பான லிங்க் ஒன்றையும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர். இதையறிந்த உத்தரப்பிரதேச அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் கணக்கை மீட்டது.

பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் சமூக வலைதளங்களை ஹேக்கர்கள் முடக்குவது இது முதன்முறையல்ல. பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை சில மாதங்களுக்கு முன் முடக்கிய நபர்கள், அதில் கிரிப்டோகரன்சி விளம்பரத்தை வெளியிட்டிருந்தனர்.