• Fri. Apr 26th, 2024

ஆந்திர அமைச்சரவை பட்டியலில் இவர்களுக்கு வாய்ப்பு…

Byகாயத்ரி

Apr 7, 2022

ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். புதிய அமைச்சரவை ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது. அதில் ஜெகன் மோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 150 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது. அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவை இரண்டு ஆண்டுகளில் மாற்றம் செய்யப்படும் என ஜெகன்மோகன் கூறியிருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இந்த நிலையில் வரும் 11ம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்து இருக்கிறார். மேலும் இதற்கு பதிலாக பலருக்கு அமைச்சராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்திருக்கிறார். புதிய அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்தநிலையில் அமைச்சர்களாக உள்ள 24 பேரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர். இதற்கிடையில் வரும் 2024 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவையை பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், இஸ்லாமியர்கள், பெண்கள் என பல தரப்பினரையும் உள்ளடக்கி ஜெகன்மோகன் அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *