திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில். தர்கா அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கள்ளத்தி மரத்தில் தர்கா தரப்பினர் சந்தனக்கூடு திருவிழாவின் போது கொடியேற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கோவில் நிர்வாகம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா தரப்பில் அடையாளம் தெரியாதவர்கள் கொடியேற்றியதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது அதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மலை மீது சென்ற போது கல்லத்தி மரம் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால் காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது காவல்துறையினர் பாஜகவினரை கள்ளத்தி மரம் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது என கயிறு கட்டி தடுத்து நிறுத்தியுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.




