• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி -கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக,கேரளா எல்லைப்பகுதியான கோழிப்பாலம் பகுதியில் டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட 1,12,500 மதிப்புள்ள குட்கா பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தமிழக,கேரளா, கர்நாடக எல்லைப் பகுதிகளில் சமீப காலமாக தமிழக அரசு மூலம் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடந்தி வரும் சம்பவம் அதிகரித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் கூடலூர் காவல்நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தமிழக,கேரளா எல்லைப்பகுதியான கோழிப்பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கேரளா மாநில எண் கொண்ட டிப்பர் லாரியில் ரூ 1,12,500 மதிப்பிலான குட்கா பண்டல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்ட வாகனம் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த அஸ்கர், முஜீப் ரஹ்மான் ஆகியோரை கூடலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.