• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் குருபூஜை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சுவாமி ஜீவ சமாதி மடத்தில் அவரது 87வது ஆண்டு குருபூஜை ஜெயந்தி பெருவிழா நடந்தது. இந்த பூஜையை முன்னிட்டு காலை 7 மணிக்கு மங்கள இசை குத்துவிளக்கு ஏற்றுதல் விக்னேஸ்வரர் பூஜை 108 சங்கு பூஜை சுப்பிரமணிய சுவாமி ஹோமம் சத்யா சாமி ரித்தி ஹோமம் 16 வகையான மூலிகையால் செய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு மகாலட்சுமி, நவகிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்டது. 10.30மணிக்கு சதுர்வேத பாராயணம் திராவிடதே பாராயணம் நாத கீத வாத்திய உபச்சாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 11:00 மணிக்கு சொக்கையாசாமிக்கு திரவிய அபிஷேகம் மகாபிஷேகம் சங்காபிஷேகம் செய்து தீபாரதரனை காண்பிக்கப்பட்டது.

இந்த யாகசாலை பூஜைகளை சோழவந்தான் வரதராஜ பண்டிட் நடத்தினார். முன்னதாக காலை 9 மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அருகில் உள்ள மௌனகுருசாமி மடத்திலிருந்து பால்குட எடுத்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். சாதுக்களுக்கு வஸ்திரம் தானம் செய்யப்பட்டது.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் தொடர்ந்து நடந்தது.

இதில் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி உள்பட ஏராளமான பக்தர்கள், சாதுக்கள் சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.