• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத் அணி..!

Byவிஷா

May 16, 2023

ஐபில் எல் போட்டிகளில் நேற்றைய 62 ஆம் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் குஜராத் டைடன்ஸ் அணி மோதியது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு வீரரான சாய் சுதர்சன், 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மொத்தம் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி 59 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன் கிளாசன், கிளாஸாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத்.
ஐதராபாத் அணி இந்த தோல்வியின் மூலம் முதல் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து வெளியேறி உள்ளது. குஜராத் அணியின் பவுலர்கள் ஷமி மற்றும் மோகித் சர்மா என இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். யஷ் தயாள், 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். குஜராத் அணி நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. அந்த அணி இதன் மூலம் 18 புள்ளிகள் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.