அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்டி. வரி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய உணவு பொருளான அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரிசி வியாபாரிகள் அச்சமடைந்து உள்ளனர். தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி 5 சதவீத வரியால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சில்லரை வியாபாரிகள் இதன் காரணமாக மூட்டைக்கு 100 ரூபாய் கூடுதலாகவும் ஒரு கிலோவுக்கு ரூ. 3 முதல் 5 ரூபாய் வரை கூடுதலாக விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று அரிசி வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதையொட்டி இன்று அரிசி கடைகளை அடைத்து மத்திய, மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் அரிசி கடைகள், ஆலைகள் மூடப்பட்டன.