• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ஜிஎஸ்டி…

ByA.Tamilselvan

Aug 31, 2022

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் “முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் . ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு ஒப்பந்தமாகும். அதன்படி ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரெயில்வே வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவதாக உறுதி அளிக்கிறது. முன்பதிவை ரத்து செய்யும் போது ஜிஎஸ்டி விதிக்கப்படும். ரத்து கட்டணம் என்பது செலுத்தப்படும் தொகை. ஆதலால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ரயில் டிக்கெட்டை ரத்துசெய்ய ரூ.240 கட்டணம் வசூலித்தால், அதற்கு ரூ. 12 ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும். இதேபோல, விமானப் பயணம் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பதிவை ரத்து செய்தாலும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் ” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏசி அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.