• Mon. Mar 24th, 2025

ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது,அன்றைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனால் முதலில் அடிக்கல் நாட்டப்பட்டது. குலசேகரன் பட்டினத்தில். கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக எந்த பணியும் நடவாது இருந்த நிலையில். கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் இரண்டாவது அடிக்கல் நாட்டபட்ட நிலையில் இப்போது மீண்டும் இப்போதைய ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது.இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்க முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனை தொடர்ந்து, பிரதமர் மோடியால் இரண்டாவது அடிக்கல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.இதற்காக 2 ஆயிரத்து 223 ஏக்கர் நிலம் கைய கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது.பூமிபூஜையுடன் தொடங்கிய இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என தகவல்.குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் பணி காலமாகும் ஒவ்வொரு நிமிடமும். மதுரை ஏம்ய்ஸ் உடன் ஒப்பிட்டு தமிழக மக்கள் பார்ப்பதையும் பொது வெளியில் காண முடிவதாக பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.