சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் கடந்த பிப்ரவரி 13 முதல் 74 லட்சம் ரூபாய் செலவில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை அகரத்தில் எட்டு குழிகள் தோண்டப்பட்டு 500க்கும் மேற்பட்ட பண்டைய கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்ட நிலையில் உறை கிணறு, பானை, கருப்பு சிவப்பு பானை, பானை ஓடுகள் மற்றும் நத்தை கூடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடுமண்ணால் ஆன 3 சென்டிமீட்டர் உயரமுள்ள முத்திரை புதிதாக கிடைத்துள்ளது. இந்த முத்திரையின் பயன்பாடு என்ன என்பது தொடர் ஆய்வில் தெரிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.