மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப மைய இயக்குனர் அகிலா பட்டமளித்து “மாணவர்கள் படிப்பதோடு இல்லாமல் நாட்டுக்கு பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சியில் சாதனைபுரிய வாழ்த்தினார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜப் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் அசோக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன் தலைமை உரை நிகழ்த்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி இயக்குனர் அகிலா கலந்து கொண்டார்.
இந்த கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும், முதுகலை பட்டம், மற்றும் முனைவர் பட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் குறிப்புகள் வெளியிட்டுள்ளேன்.
மாணவர்கள் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல் தங்களின் திறமையால் புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளையும்,செயல் திறமையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய நேரம் சிந்தனை ஆற்றல் ஆகியவைகளை இக்கல்லூரிக்கு திருப்பி கொடுக்கும் நேரம்.
கல்லூரியின் மாணவர்களுக்கு நலனுக்காக முன்னாள் மாணவர்கள் குழு மூலம் பல லட்சம் செலவு செய்வதாகும் வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருவதாகவும் கூறினார்.
மாணவர்கள் மிதுன், ராஜ்மதன் இருவரும்அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 45 லட்சம் சம்பளமாக பெற்றதற்கு பாராட்டுக்கள் இம்மானவர்களை போன்று பிற மாணவர்களும் முன்னேறுவதற்கு அவர்களின் உந்து சக்தியை கொண்டும் முன்னேற வேண்டும்.

நான் இக் கல்லூரியில் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் இக்கல்லூரி பல மேதைகளையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி உள்ளது என திருச்சி என்ஐடி கல்லூரியின் இயக்குனர் Dr.அகிலா கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் அகிலாவிற்கு கல்லூரி முதல்வர் அசோக்குமார் மற்றும் தாளாளர் தியாகராஜன் நினைவு பரிசு வழங்கினர்.
மதிப்பு விழாவில் 1046 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 98 மாணவர்கள், மாணவியர்கள் இளநிலை பட்டமும் 138 மாணவ மாணவியர்கள் முதுநிலை பட்டம் பெற்றனர். பட்டம் பெற்றவர்களில் 591 மாணவர்கள் சிறப்பு முதல் வகுப்பு தேர்ச்சியும், 405 மாணவர்கள் முதல் வகுப்பு பட்டமும். 33 ம மாணவர்கள் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றனர்.
