கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே பாப்பையம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய கிணற்றில் இன்று குளிக்கச் சென்ற சக்திவேல்முத்தையாவின் இளைய மகன் முத்துமணி (18) தவறி விழுந்து உயிரிழந்தார் இவர் கரூர் ஜெகதாபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றிற்கு குளிக்கப்பதற்காக வந்துள்ளார் கிணற்று மேல் இருந்த கட்டை பகுதியில் குளித்து கொண்டிருந்த முத்துமணி எதிர்பாராத விதமாக ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய முத்துமணியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இலாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
