• Wed. Apr 17th, 2024

அம்பேத்கர் பெயரையே வாசிக்காத ஆளுநர் -சபாநாயகர் அப்பாவு

ByA.Tamilselvan

Jan 9, 2023

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது சபாநாயகர் அப்பாவு பேச்சு
ஆளுநர் உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைகுறிப்பில் இடம்பெறும் என்று அப்பாவு கூறியுள்ளார். தேசியகீதம் இசைத்து முடித்தபின்னர் அவையிலிருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு என்று தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது.
உரையில் திருத்தம் செய்ததை முறைப்படி சொல்லாமல் அதனை பொதுமேடையில் பேசுவது நாகரீகமல்ல என்று சபாநாயகர் கூறியுள்ளார். வேறு உயர்பதவிக்காக இதுபோன்ற செயல்படுகின்றாரோ என சந்தேகம் எழுகிறது. ஒன்றிய அரசு தயாரித்த உரையையே நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் வாசிக்கிறார். பாஜக ஆழத்தை மாநிலங்களில் ஆளுநர்கள் வேறுபட்டு செயல்படுகிறார்கள், அவர்களது நோக்கம் என என்பது தெரியவில்லை என்று அப்பாவு கூறியுள்ளார்.
தேசியகீதம் முடியும் வரை ஆளுநர் இருந்திருத்தால் மகிழ்ச்சி ஆனால் அவர் வெளியேறியது நாட்டை அவமதிப்பது போன்றது என்று சபாநாயகர் கூறியுள்ளார். அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநர் அதனை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என்று அப்பாவு கூறியுள்ளார். ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்தாலேயே முதலமைச்சர் பேசவேண்டியதாகிவிட்டது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *