• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் ரவிகலந்து கொண்ட யோகா பயிற்சி..,

ByKalamegam Viswanathan

Jun 21, 2025

ஆளுநர் R.N. ரவி காலை 8.05 மணிக்கு யோகா பயிற்சியை துவக்கி வைத்து தொடர்ந்து மாணவர்களிடம் தொடர்ந்து உடற்பயிற்சிகளும் அதில் தண்டால் பயிற்சி மூலம் 51 தண்டால் செய்து ஆச்சரியப்படுத்தினார்.

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொள்ளும் 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோகா சாதனை நிகழ்வு நடைபெறுகிறது.

வேலம்மாள் கல்வி குழுமம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து 10 ஆயித்து 200 பேர் கலந்து கொண்ட மதுரையின் முதல் சாதனை காலை 8 மணிக்கு நடைபெறும் சர்வதேச யோகா 11வது ஆண்டு விழா நிகழ்ச்சியினை தமிழக ஆளுநர் ரவி துவக்கி வைத்து யோகா பயிற்சி மேற்கொள்கிறார்

.
மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி குறித்து விளக்கம் அளிக்க தமிழக ஆளுநர் ஆரன் ரவி தற்போது விழா மேடைக்கு வந்துள்ளார்

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொள்ளும் 11 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

தனியார் விடுதியில் தங்கி இருந்த ஆளுநர் R.N. ரவி காலை 7.50 மணிக்கு வேலம்மாள் சர்வதேச பள்ளி வளாகத்திற்கு வந்தார், வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களின் பாண்டு இசை முழுங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு சர்வதேச யோகா 11வது ஆண்டு விழா நிகழ்ச்சியினை தமிழக ஆளுநர் ரவி துவக்கி வைத்து யோகா பயிற்சியினை உசேன் போல்ட் மைதானத்தில் மேற்கொண்டார்.

வேலம்மாள் சர்வதேச பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் காலை 8.05 மணிக்கு கவர்னர், ஆர். என் ரவி யோகா பயிற்சியை துவக்கி பல்வேறு யோகாசனங்களின் பெயர் கூறி மாணவர்களுக்கு செய்து காட்டினர்.

வேலம்மாள் சர்வதேச பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் காலை 8.05 மணிக்கு கவர்னர், ஆர். என் ரவி யோகா பயிற்சியை துவக்கி பல்வேறு யோகாசனங்களின்
பெயர் கூறி மாணவர்களுக்கு செய்து காட்டினர்.

யோகாசனங்களை செய்வதால் உடலுக்கும் உங்கள் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும் நன்றி சிறப்பாக செய்கிறீர்கள்.

நன்றியுரையாக வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில்
.யோகாசன பயிற்சிகள் மூலம் நமது உடலுக்கு வலிமை சேர்ப்பது தான் மனதுக்கும் வலிமை சேர்க்கிறது நான் சில ஆண்டுகளுக்கு முன்பு முது வழியால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டேன் அப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்த அதன் மூலம் எனது முதுகு வலியை யோகப்பயிற்ச்சியின் மூலம் சரிப்படுத்தி உடற்பயிற்சியின் அவசியத்தை புரிந்து கொண்டேன்.

யோகா பயிற்ச்சி மிகவும் சிறந்தது பயிற்ச்சியாக எண்ணாமல் தொடர்ந்து செய்தோமானால் நமது உடல், மனம் வளம் பெறும் ஆசையால் நாம் யோகாவை பின்பற்றுவோம்.

வேலம்பாள் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த பெருமைமிகு யோகா
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மேதகு ஆளுநருக்கு எனது நனிதியினை தெரிவித்து கொள்கின்றேன் என வேலம்மாள் கல்வி குழு தலைவர் முத்துராமலிங்கம் கூறினார்.