• Tue. Apr 22nd, 2025

பொன்முடி பேசியதை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..,

ByKalamegam Viswanathan

Apr 12, 2025

கல்விக்கூடங்களில் கம்பர் எனும் தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளின் நிறைவு பரிசளிப்பு விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற்றுள்ளார்.

கல்லூரி விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

இராமாயணத்திலே கம்பராமாயணம் குறித்து பேசும்போது பெண்கள் எப்படி போற்றப்பட வேண்டும் என கம்பன் கூறியதை பார்த்தோம், சில தினங்களுக்கு முன்பு அரசை சேர்ந்த நபர் பெண்களை எவ்வளவு தரை குறைவாக விமர்சித்து வந்தார் என்று பார்க்கும்போது. கண்டனத்துக்குரியதாக விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று பார்க்கிறோம். கம்பன் காட்டிய பாதயை அழிக்கிறோம்.

வேறு வழி இல்லாமல் கட்டயத்திற்குதட்டு அவரை கணவான் என்று அழைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன். பெண்களின் கண்ணியத்திற்கு அவர் பங்கம் விலைவிக்கவில்லை சிவன், விஷ்ணுவை வனகுபவர்களை காலில் போட்டு மிதித்திருக்கிறார்கள்.

அந்த கனவான் தனி நபர் அல்ல ஒரு சூழலை சேர்ந்த சிறு புள்ளி. நமது தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவது, சனாதன தர்மத்தை மலேரியா கொசுவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.