இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டின் முதலாவது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் ரவி தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை வாசிக்க மறுத்தார். அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். மேலும் ஆளுநரின் உரைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்த வருமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, பேரவை தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்திருந்தார். இதனையேற்று இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவை தலைவர் மு.அப்பாவு, பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்பின் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது பேரவை தலைவர் இருக்கைக்கு முன்பு உள்ள மைக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது தனது உரையை வாசிக்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)