டெல்லி தமிழ் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஜிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பிறகு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:- திருக்குறளில் பக்தி ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டது. ஆதி பகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பைவிடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கலாசாரம் இல்லாத நாடாக, ஒரு பொருளாக, சந்தையாக காட்ட முயன்றனர். இந்தியா, கலாசாரம் நிறைந்த பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.