விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் 865 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு

சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மூலம் அரசாணை வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த குடியிருப்பு பகுதிகளில் மின்சார இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. கழிவுநீர் செல்லக்கூடிய கழிவுநீர் குழாய்கள் அமைக்காததால் பயனாளிகள் குடியோரி செல்ல முடியாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இந்த கட்டிடத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும் . மீதமுள்ள 765 பயனாளிகளுக்கும் அரசாணை வழங்கி விரைவாக அடுக்குமாடி குடியிருப்பை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.