• Mon. May 29th, 2023

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் பயன்களை பொது மக்களுக்கு மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மூலமாக எளிய முறையில் மாணவர்களுக்கும் மக்களுக்கும் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மேலும் நாட்டுப்புற கலைஞர்களை இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டுத்துறை மாவட்ட இசைப்பள்ளி சார்பாக கலைஞர்களை அடையாளப்படுத்தி கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்ற கலைஞர்களை கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி கலைஞர்களின் இரண்டு ஆண்டு காலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும்

எனவும் மாவட்டந்தோறும் அரசு பதிவு பெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்தி உண்மையான கலைஞர்களை வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கையான சென்னை லயோலா கல்லூரி காளீஸ்வரன் என்பவர் மாற்று ஊடக மையம் என்ற பெயரை வைத்துக்கொண்டு கலைக்கு சம்பந்தமில்லாத கலைஞர்களை கலைப் பண்பாட்டுத் துறையில் அடையாள அட்டை இல்லாமல் பயன்படுத்தி தனிநபராக ஆதாயம் பெற்று வருகின்றார் என அவர் மீது குற்றம் சாட்டி காளீஸ்வரன் விடுவித்து முழுக்க முழுக்க அனைத்து நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *