• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் அரசு அறிவிப்பு..!

Byவிஷா

May 2, 2023

தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த பணிகளில் சேர டி.எட்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்பக் கடிதம், அனுபவச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் ஆகியவை தேவைப்படும்.

அதேசமயம் இந்த பணியிடங்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் இறுதி தகுதி பட்டியல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயது இருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://icds.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதே சமயம் இந்த பணியில் சேர்ந்தால் மாதம் 6500 முதல் பணிக்கு தகுந்தாற் போல சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.