• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முகேஷ் அம்பானிக்கு கைமாறும் அரசு ஹோட்டல்

ByA.Tamilselvan

Nov 25, 2022

இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலை, முகேஷ் அம்பானி வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான, பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக 7,409 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மேலும் 7 ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், டெல்லியின் மையப்பகுதியில், 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் விற்பனை செய்யப்படவுள்ள அசோக் ஹோட்டலை முகேஷ் அம்பானியே வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.