• Wed. May 1st, 2024

வசூலில் சாதனை படைத்த அரசு பேருந்துகள்

Byவிஷா

Apr 18, 2024

கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்து கழகமான கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்துகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.8.57 கோடி வருவாயை ஈட்டி வசூலில் சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் கூடுதல் லாபத்துடன் இயங்கி வருகிறது கர்நாடகா மாநிலத்தின் போக்குவரத்து கழகமான, கேஎஸ்ஆர்டிசி. இந்த ஏப்ரல் மாதத்தில் வசூல் சாதனை படைத்துள்ளது. . கேஎஸ்ஆர்டிசி ரூ.8.57 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஏப்ரல் 2023ல் எட்டப்பட்ட 8.30 கோடியை தாண்டியுள்ளது. இயக்கப்பட்ட 4324 பேருந்துகளில் 4179 பேருந்துகள் மூலம் ரூ.8.57 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.8.30 கோடி வருவாய் கிடைத்த நிலையில், 4331 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4200 பேருந்துகள் மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர்டிசியின் கூற்றுப்படி, செலவை அதிகரிக்காமல் வருவாய் கிடைக்கும் முக்கிய வழித்தடங்கள் மற்றும் நீண்ட தூர வழித்தடங்களில் கூடுதல் சேவைகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ததன் மூலம் பலன் அடையப்பட்டது.
கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம், கேஎஸ்ஆர்டிசியின் செயல்பாடுகளை மேம்படுத்த விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *