• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாலத்தீவிலும் விரட்டியடிக்கப்படும் கோத்தபய ராஜபக்சே

ByA.Tamilselvan

Jul 13, 2022

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேற்ற வலியுறுத்தி மாலத்தீவிலும் போராட்டம் தொடர்கிறது
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். . இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் வெடித்துள்ளது. கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் இப்ராகிமின் மாளிகை அருகே மாலத்தீவு மக்கள், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.