• Fri. Apr 19th, 2024

சோவியத் யூனியன் கடைசி தலைவர் கோர்பசேவ் காலமானார்…

ByA.Tamilselvan

Aug 31, 2022

சோவியத்யூனியனின் கடைசி தலைவராக இருந்த கோர்பசேவ் வயது முதுமை காரணமாக காலமானார்.
சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. சோவியத்யூனியன் தற்போதைய ரஷ்யாவாக மாறியது இவரது காலத்தில் தான்.1990-ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மிக்கைல் கோர்பசேவ் இறந்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவுக்கு ரஷிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *