• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வங்கி வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு..

ByA.Tamilselvan

Jun 4, 2022

வங்கி வேலை தேடுபவர்களுக்கு நல்லவாய்ப்பாக நாடு முழுவதும் 1544 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை IDBI வங்கி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய வங்கி ஜூலை மாதம் ஆன்லைன் தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் 1,544 எக்சிகியூட்டிவ்ஸ் (ஒப்பந்தம் சார்ந்த) மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர்களுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சமீபத்திய ஆட்சேர்ப்பு அறிவிப்பில் IDBI வங்கி மொத்தம் 1,044 எக்சிகியூட்டிவ் போஸ்ட்களுக்கான காலியிடங்களையும், 500 அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட்களுக்கான காலியிடங்களையும் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் ஜூன் 17 வரை idbibank.in என்ற வெப்சைட்டிற்கு சென்று விண்ணப்பிக்கலாம். எக்ஸிகியூட்டிவ் போஸ்ட்களுக்கு இது ஒரு நேரடி ஆட்சேர்ப்பு செயல்முறையாக (direct recruitment process) இருக்கும்.
அதே நேரம் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட்களுக்கு விண்ணப்பதாரர்கள் முதலில் மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (மணிபால்), பெங்களூரு மற்றும் கிரேட்டரின் நிட் எஜுகேஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (நிட்) ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படும் 1 வருட போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் (PGDBF – Post Graduate Diploma in Banking and Finance) படிப்பில் சேர வேண்டும். இந்த படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் விண்ணப்பதாரர்கள் IDBI வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடு ‘ஏ’ (Assistant Manager Grade ‘A’) போஸ்ட்டில் சேரலாம்.
IDBI எக்சிகியூட்டிவ் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பதவிகளுக்கான கல்வித் தகுதியில் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படிப்பை மட்டும் வைத்திருப்பது தகுதி அளவுகோலாக கருதப்படாது.
இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் முதலில் IDBI வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான idbibank.in-க்கு செல்லவும். ஹோம் பேஜில் உள்ள Careers லிங்கை கிளிக் செய்யவும். Current Openings என்பதை கிளிக் செய்யவும். பின்னர் IDBI Executive and Assistant Manager Recruitment 2022 என்ற லிங்கை கிளிக் செய்யவும். ஒரு புதிய பேஜ் ஓபன் ஆனவுடன் அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட சைசில் அப்லோட் செய்யவும். அப்ளிகேஷன் ஃபார்முக்கான கட்டணத்தைச் செலுத்தி அதை சமர்ப்பிக்கவும். உங்களின் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து save செய்து வைத்து கொள்ளவும்
சேர்ந்தால் வங்கிவேலையில்தான் சேர்வேன் என நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு .