• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை மீண்டும் உயர்வு..!

Byவிஷா

Feb 1, 2023

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.
ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது. இந்த நிலையில் இன்று, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 22 ரூபாய் உயர்ந்து இன்று 5722 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் வரை உயர்ந்து 45,776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 22 ரூபாய் உயர்ந்து 5,360 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 176 ரூபாய் உயர்ந்து 42,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 74.80 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 74,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.