• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை எகிறுதே..!

Byகாயத்ரி

Feb 9, 2022

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 112 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36,472க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 14 உயர்ந்து ரூபாய் 4,559க்கு விற்பனையானது. இதையடுத்து வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 65.10க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 36,624க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,578க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் ரூபாய் 1.80 உயர்ந்து ரூபாய் 66.80க்கு விற்பனையாகிறது.