கடந்த இரண்ட நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று (ஏப்ரல் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 9,005 விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 72,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வந்த நிலையில், இன்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
இன்று சென்னையில் 24 காரட் கிராம் தூய தங்கத்தின் விலை ரூ. 9,823-க்கு விற்பனையாகத் துவங்கியுள்ளது. அதேபோல ஒரு சவரன் தங்கம் இன்று 78,584 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தை போலவே 24 காரட் தங்கத்தின் விலையிலும் மாற்றம் எதுவும் இல்லை.
இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 111 என்ற விலைக்கு விற்பனையை துவங்கியுள்ளது. அதே போல் 1 கிலோ வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போலவே இன்று வெள்ளி விலையிலும் மாற்றம் எதுவும் இல்லை.
தங்கம் விலை தொடர்ந்து குறைவு
