தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து, ரூ.6,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ரூ.54,440-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,509-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, ரூ.5,574-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 88,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் உயர்ந்து, ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.