அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 7795 ரூபாய்க்கும், ஒரு சவரன் 62,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெளளி 2000 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் 59 ஆயிரத்தை நெருங்குகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தொடர்ந்து தங்கம் விலையும் உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை







; ?>)
; ?>)
; ?>)