• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தங்கம் வாங்குறது கஷ்டம் தான் போல!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 272 விலை உயர்ந்துள்ளது.

இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த சில நாட்களில் விலையேற்றம் நீடிக்கிறது. ஆறுதல் தரும் விதமாக நேற்று விலை குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நகை வாங்குவோர் கவலையடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4484 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4450ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 34 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 35,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 272 உயர்ந்து ரூ.35,872-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4484 விற்பனை செய்யப்படுகின்றது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 67.80 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.10 உயர்ந்து 67.90 விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 272 விலை உயர்ந்துள்ளது.