• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்வு

Byவிஷா

May 21, 2025

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளியும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 13-ம் தேதி காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. அதன் பின்னர் மே 15 அன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது.
பின்னர் மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அதன்படி, இன்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,111-க்கும் விற்பனையாகிறது.