சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவெனக் குறைந்துள்ளது. சென்னையில், நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து, ரூ.75 ஆயிரத்தைத் தாண்டியதால், நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. ஆனால், நேற்று உயர்ந்த விலை இன்று அப்படியே (ரூ.2,200) குறைந்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் நிற்காத பட்சத்தில், தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.570 மற்றும் சவரனுக்கு ரூ.4,569 அதிகரித்துள்ளது. நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.2,200 அதிகரித்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று விலை குறைந்துள்ளது, சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.
சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கும்; சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.111-க்கும், கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை இன்று சவரன் ரூ.2200 சரிவு
