• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் தங்கம்

Byவிஷா

Oct 18, 2024

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்று சவரன் ரு.57ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை, இன்று ரூ.58ஆயிரத்தை நெருங்கி இல்லத் தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை கடந்த தங்கம் இன்று ரூ.58 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,240-க்கும் சவரன் ரூ.57,920 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,488-க்கும், கிராமுக்கு ரூ.7,898 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், தொடர்ந்து ஆறாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்றுக்கு ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாளுக்கு நாள் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.