

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4735க்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 37,880க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5137 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41,096எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூபாய் 60.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60, 300 எனவும் விற்பனையாகி வருகிறது.
