• Tue. Jun 18th, 2024

மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…

ByNamakkal Anjaneyar

Jun 14, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. இந்த சந்தைக்கு பெருந்துறை பள்ளப்பட்டி சேலம் ஓமலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வருகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளை இந்த சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் திருப்பூர் கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்தும் பலரும் கால்நடைகளை வாங்க இந்தப் பகுதிக்கு வருகை தருகிறார்கள். இந்நிலையில் பக்ரீத்துக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த வாரம் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறும்பை ஆடு வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வந்தனர். 2000 ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடுகள் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சேலம் பள்ளப்பட்டி நாமக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து வாங்குவதற்காக வந்திருந்தனர். இந்த சந்தையில் இந்த வாரம் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளப்பட்டியை சேர்ந்த அப்துல் தாரிக் கூறும்போது.., இந்த மோர்பாளையம் ஆட்டு சந்தை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் இடமாக உள்ளது. சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு இன்று விற்பனை நடைபெற்று இருக்கும் என்று கூறினார். இவரைத் தொடர்ந்து மோகன் பாபு என்பவர் கூறும் போது.., இந்த மோர்பாளையம் மாட்டுச்சந்தை வார வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை ஓடுகிறது. இங்கே சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆட்டுச் சந்தையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் காண ஆடுகளை வாங்கிச் சென்றனர். பக்ரீத் காரணமாக மாடுகள் மற்றும் கோழிகளின் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *