• Sat. Apr 27th, 2024

ஒளிர்கிறது இந்தியா : டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும் யாசகர்

Byவிஷா

Mar 28, 2024

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிச்சைக்காரர் ஒருவர் க்யூ ஆர் கோடு மூலம் டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால மத்திய அரசில் பிளாட்பார்ம் கடைகள் தொடங்கி கோவில்களில் இ-உண்டியல், ஷாப்பிங் மால்கள் வரை அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். இதன் மூலமாக இந்தியா வளர்ந்து வருகிறது என தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர் அரசியல்வாதிகள். இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் கூட டிஜிட்டல் முறையில் க்யூ ஆர் கோடு மூலம் பிச்சை எடுத்து வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
அசாமின் கவுஹாத்தியில் பார்வையற்ற பிச்சைக்காரர் டிஜிட்டல் முறையில் க்யூஆர்கோடு வைத்துள்ளார்.
இவருக்கு பிச்சை கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன் பேமெண்ட் கொடுக்கலாம். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிச்சைக்காரர் கழுத்தில் போன்பே க்யூ ஆர் கோடு குறியீடு கொண்ட கார்டு இருக்கிறது. பிச்சைக்காரர் காரில் இருக்கும் இரண்டு பேரை அணுகி பிச்சை கேட்க, அவர்களில் ஒருவர் அவருக்கு ரூ10 அனுப்புவதற்காக க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ததும் இதனை உறுதிப்படுத்த பிச்சைக்காரர் தனது தொலைபேசியை காதுக்கு அருகில் கொண்டு செல்கிறார். இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் கவுரவ் சோமானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “இது ஒரு சிந்தனையைத் தூண்டும் தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தொழில்நுட்பம் உண்மையில் எல்லையே இல்லாதது. சமூக-பொருளாதார நிலையிலும் கூட, தடைகளைத் தாண்டிச் செல்லும் தொழில்நுட்பத்தின் சக்திக்கு இது ஒரு சான்றாகும்” என ஆளும்கட்சியை சாடியுள்ளார். ஏற்கனவே இதே போல், பீகாரின் பெட்டியா ரயில் நிலையத்தில் 40 வயதான ராஜு படேல் என்ற பிச்சைக்காரர் தனது கழுத்தில் ஞசு குறியீடு கொண்ட போர்டு ஒன்றை மாட்டிக்கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்டதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த டிஜிட்டல் பிச்சைக்காரர் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியைக் கேட்க மறப்பதில்லை எனவும் டிஜிட்டல் பிச்சைக்காரர் ராஜு படேல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *