• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்குள் கண்ணாடித்துகள்..!

ByP.Thangapandi

Aug 27, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த செந்தன் என்ற நபர் நேற்று அருகிலுள்ள பெரியகுறவகுடி அரசு மதுபான கடையில் சீமான்ஸ் என்ற பெயரிடப்பட்ட குவாட்டர் பாட்டில் வாங்கி உள்ளார்.,

இந்நிலையில் பாட்டிலை வாங்கி சென்ற அவர் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து மது அருந்துவதற்காக பாட்டிலை திறக்க முயன்ற போது பாட்டிலுக்குள் உடைந்த கண்ணாடி துகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.,

இச்சம்பவம் மதுபான பிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.,
இதனால் மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.,

இந்த வீடியோ வைரல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.,