கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் புதிய கூலி உயிர்வை பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தும். பாத்திர உற்பத்தியாளர்களை கண்டித்தும், போதுமான பதிவு பெறாத தொழிலாளர் சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஏமாற்றி வரும் பாத்திர உற்பத்தியாளர் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை பழைய பேட்டையில் சிஐடியு பித்தளை பாத்திர தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் ராஜன் தலைமை தாங்கினார் பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க தலைவர் முத்து, செயலாளர் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர் , சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் ,கோரிக்கைகளை விளக்கி சங்கத் துணைத் தலைவர் துரை நாராயணன், பொது தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் , பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.சரவணபெருமாள் நிறைவு உரையாற்றினார்
பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார், ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்