• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளுடன் பெண் போராட்டம் – நாகர்கோவி லில் பரபரப்பு

Byகுமார்

Sep 23, 2021

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன் கூடல் என்ற இடத்தை சேர்ந்தவர் சாரதி. இவர் மனைவி பிருந்தாதேதி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சாரதி மீது இந்து முன்னணி பிரமுகர் தூண்டுதலின் பெயரில் மண்டைக்காடு போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பால பிருந்தாதேவி தனது 2 குழந்தைகளுடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திடீரென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் வழக்குகளை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .