• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்….

Byகாயத்ரி

Mar 23, 2022

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப உள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பை கைப்பற்றிய போது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆப்கான் தலைநகர் உட்பட பல மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

சர்வதேச சமூகத்தை மகிழ்ச்சி அடைய செய்வதற்காக நாங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை. எங்கள் மாணவிகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்காகவே நாங்கள் -பள்ளிகளை திறந்துள்ளோம். 12 முதல் 19 வயது வரையிலான பெண்களுக்கான பள்ளிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இஸ்லாமியக் கொள்கைகளின்படி செயல்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.